பயனர்கள் மற்றவர்களைப் புண்படுத்தும் கருத்துக்களை கமெண்ட் செய்யும்போது எச்சரிக்கும் ஒரு அம்சத்தை YouTube அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் “இடுகையிடுவதற்கு முன்பு சரிபார்க்கும்” விருப்பத்தை அவர்களுக்கு வழங்குகிறது. இந்த அம்சம் பயனர்களுக்கு நினைவூட்டுவதற்கு மட்டுமே. இதனால் அவர்கள் கருத்துகளைத் திருத்த முடியும். இருப்பினும், பயனர்கள் கருத்துகளை இடுகையிடுவதை இது தடுக்காது.

இப்போது, இந்த அம்சம் Android பயனர்களுக்கு கிடைக்கிறது.
யூடியூப்பில் வீடியோவை வெளியிடும் போதும் இந்த கண்காணிப்பு செயல்படும். இது வீடியோக்களில் தீங்கு விளைவிக்கும் கருத்துகளைக் கண்டறிய முயற்சிக்கும். மேலும் அவை தானாகவே மதிப்பாய்வு செய்யப்படும்.