எல்லா நாடுகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், பலர் பயணம், ஷாப்பிங் மற்றும் மீண்டும் திரைப்படங்களுக்குச் செல்லக்கூடிய நாள் பற்றி கனவு காணுவர். ஆனால் அந்தச் செயல்களைச் செய்வதற்கு,நீங்கள் எங்கு சென்றாலும் தடுப்பூசி போட்டதற்கான ரசீது தேவைப்படும். நாடு விட்டு நாடு செல்லும் போது அதை தடுப்பூசி பாஸ்போர்ட் என்றே சொல்லலாம்.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற தி காமன்ஸ் திட்டம் மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் முன்முயற்சியான காமன் டிரஸ்ட் நெட்வொர்க் ஆகியவை கேத்தே பசிபிக், ஜெட் ப்ளூ, லுஃப்தான்சா, சுவிஸ் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக், மற்றும் நூற்றுக்கணக்கான சுகாதார அமைப்புகள் மற்றும் பல விமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. குழுவால் உருவாக்கப்பட்ட காமன் பாஸ் பயன்பாடு, கோவிட் -19 சோதனை முடிவு போன்ற மருத்துவத் தரவைப் பதிவேற்ற பயனர்களை அனுமதிக்கிறது.இறுதியில், ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவ நிபுணரால் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம், சுகாதார சான்றிதழை உருவாக்குகிறது. QR குறியீட்டின் வடிவத்தில் இறுதி முடிவை தருகின்றது. இதனால் மக்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளுக்கு ஆதாரம் காண்பிக்க முடியும்.