
பிரிட்டிஷ் எழுத்தாளர் நீல் கெய்மன், ஐ.நா. அகதிகளுக்கான உயர் கமிஷன் (யு.என்.எச்.சி.ஆர்) உடன் ஒரு புதிய வீடியோ பிரச்சாரத்தைத் தொடங்கினார். 2017 முதல் யு.என்.எச்.சி.ஆர் நல்ல தூதரான கெய்மன் அந்த வீடியோவிற்காக ஒரு கவிதை எழுதினார். அது “வாட் யூ நீட் டு பீ வார்ம்” என்று தொடங்கியது.
அகதிகளின் அவல நிலையைச் சுட்டிக் காடும் இந்த கவிதை மக்களின் கவனத்தை ஈர்த்தது. வீடியோவில் உள்ள அனிமேஷன்கள், கலைஞர்கள் முதல் பள்ளி குழந்தைகள் வரை 900க்கும் மேற்பட்டவர்களால் உருவாக்கப்பட்டவை. அந்த அனிமேஷன் வீடியோவில் பல அகதிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் முக்கியமாக லெபனானில் உள்ள சிரியர்களுக்காக நிதி திரட்டும் முயற்சி.
வீடியோவைப் பார்க்கும் நபர்கள் “நீங்கள் இதமாக ஒரு வீட்டில் இருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கெய்மன் கூறினார்.மேலும் உலகெங்கிலும் உள்ள அகதிகள் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் தவிப்பதை சற்று சிந்தியுங்கள் ", என்று கூறினார்.