2020 ஆம் ஆண்டு நடந்த ஆர்க்டிக் மின் நிலைய எரிபொருள் கசிவு, உலக வரலாற்றிலேயே மிகப்பெரியது என்று ரஷ்யா ஒப்புக்கொண்டது. ரஷ்ய உலோக நிறுவனமான நோர்னிகலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் எண்ணெய் தொட்டி மே 29 அன்று இடிந்து விழுந்ததை அடுத்து சுமார் 21,000 டன் எண்ணெய் சுற்றியுள்ள நிலத்திலும், நோரில்ஸ்க் நகருக்கு அருகிலுள்ள நீர்வழிகளிலும் உளற்றப்பட்டது.

இவ்வளவு டீசல் எரிபொருள் மனிதகுல வரலாற்றில் ஒருபோதும் சிந்தப்படவில்லை ” என்று அமைச்சர் அலெக்சாண்டர் சுப்ரியன் செய்தியாளர்களிடம் கூறினார். நோர்னிகல், தற்போது ரஷ்யாவின் மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவுடன் 2 பில்லியன் டாலர் இழப்பீடு கோரலில் ஈடுபட்டுள்ளது.