மைக்கேல் நின்லி என்பவர் கின்னஸ் உலக சாதனை படைக்க மூன்று மாதங்கள் மற்றும் 10 நாட்கள் எடுத்துள்ளார்.

இவரது சாதனை என்னவென்றால் கையால் வரையப்பட்ட உலகிலேயே மிக பெரிய ஓவியம். இந்த ஓவியம் 1,126.36 சதுர அடி பரப்பளவை உள்ளடக்கியது. இவரது உலக சாதனையை வீடியோ வில் காணலாம். அதில் மிக நீளமான பெரிய காகிதத்தில் அவர் வரைவது தெரியும். மொத்த காகிதத்தையும் சுருட்டி வைத்து அவ்வப்போது இழுத்து நுணுக்கமாக வரையும் அவரது திறன் வியப்பில் ஆழ்த்தும்.
கடைசியாக அவரது ஓவியத்தை பெரிய இடத்தில் பரப்பி காட்டியுள்ளார். அந்த மொத்த ஓவியத்தையும் பிரம்மாண்டமாக காண்பித்து நடுவே அவர் நிற்பதை வீடியோவில் நீங்கள் காணலாம். தனது உலக சாதனை முயற்சி குழந்தைகளுக்கான சமூக கலை நிகழ்ச்சிகளை வழங்கும் டெட்ராய்ட் அமைப்பான லிவிங் ஆர்ட்ஸுக்கு நிதி திரட்டியதாக நின்லி கூறினார்.