• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உலகிலேயே பறக்கின்ற மின்சார ரேஸ் கார் - அசத்துகின்ற ஆஸ்திரேலியாவின் எலடா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் !!

உலகம் முன்னேற்ற பாதையை நோக்கி போய்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று வளர்ந்து வரும் டெக்னலாஜி தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அதில் குறிப்பாக வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மாட்டு வண்டி, குதிரை வண்டியை பயன்படுத்திய காலம் போய் இன்று கார், பைக் போன்ற வாகனங்களை எளிதான வாழ்க்கை வாழ்கின்ற மக்களும் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டது இவ்வுலகம்.


அடுத்த நிலை முயற்சியாக மின்சார ரயில், எலெக்ட்ரிக் கார் போன்றவை வந்து கொண்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் எலடா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உலகிலேயே முதன் முதலாக பறக்கின்ற ரேஸ் காரை உருவாக்கி உள்ளது. ஏர் ஸ்பீடார் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரேஸ் கார் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதோடு மட்டுமல்லாமல் செங்குத்தாக ஏறி இறங்கும் வசதி கொண்ட வகையில் இருக்கிறது.



இந்த ரேஸ் கார் ரிமோர்ட் மூலம் இயக்கப்படும் எனவும், முழுவதுமாக மின்சாரம் மூலம் இயக்கப்படுவதால் சுற்று சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனம் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வருவதாகவும் எலடா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios