• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பார்க்க இனி புதுவைக்கு போகலாம்...

சர்வதேச கிரிக்கெட்டு போட்டி நடத்தபட பல சிறந்த சேடியம்கள் இந்தியாவில் உள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மற்றும் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியம் ஆகியவை பிரமிக்கதக்க அழகைக் கொண்டிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக புதிய சேடியம்கள் உருவாகி உள்ளன. விரைவில், இந்தியாவின் மற்றொரு வரலாற்று இடத்தில் சர்வதேச போட்டிகள் விளையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி (சிஏபி) அதிகாரி ஒருவர் ஊடகங்களுடன் பேசியபோது, ​​எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த சாத்தியமான இடமாக புதுச்சேரியை கருத்தில் கொள்ளுமாறு பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். மேலும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இதுபோன்ற சிறிய இடங்கள் மேலும் வளர உதவும், என்றார்.




இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லோதா கமிட்டி பரிந்துரைத்ததால் சிஏபி, பிசிசிஐவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இந்த வளர்ச்சியிலிருந்து பல புதிய அணிகள் பிசிசிஐ போட்டிகளில் பங்கேற்கின்றன.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios