• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உலகின் சிறந்த நகரங்களில் டெல்லி

2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி இடம்பெற்றுள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள 100 சிறந்த நகரங்களின் தரவரிசையில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரம் இதுவாகும். இந்தியாவின் தேசிய தலைநகரான டெல்லி 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 62 வது இடத்தில் உள்ளது.


கடந்த ஆண்டு, டெல்லி 81 வது இடத்தில் இருந்தது, இந்த ஆண்டு தரவரிசையில் கணிசமாக மேம்பட்டுள்ளது. இந்த தரவரிசையை ரெசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டது. டெல்லியைத் தவிர, இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நகரங்களில் சான் பிரான்சிஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், ரோம், வாஷிங்டன் டி.சி, அபுதாபி, டொராண்டோ, ப்ராக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகியவை அடங்கும். உலகெங்கிலும் உள்ள சிறந்த நகரங்களின் தரவரிசை -இடம், நற்பெயர் மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய படுவதாகத் தெரிவிக்கின்றனர்.




டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் பதிவை மறு ட்வீட் செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “இது எல்லா தில்லிவாலர்களுக்கும் ஒரு நல்ல செய்தி. அனைத்து டில்லி மக்களும் கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். டெல்லியில் நிகழும் சாதகமான மாற்றங்களை உலகம் கவனித்து வருகிறது "என்பனவற்றை மக்களுடன் பகிர்ந்தார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios