
உலக வர்த்தக அமைப்பு 164 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இதன் முதல் பெண் தலைவராக ஓகோன்ஜா இவேலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் நபர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். ஓகோன்ஜா இவேலா அவர்களுக்கு இந்த பதவியை கொடுப்பதற்கு, முன்னாள் அதிபர் டிரம்ப் தடையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் இவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததால் இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது.