மரணத்திற்கு ஈடான ஒரு வலி என்றால் அது பிரசவ வலி தான். அத்தகைய வலியை சந்திப்பதற்கு முன்பு வரை தன்னுடைய வேலையை பொறுப்புடன் செய்து வந்துள்ளார் ஜெய்ப்பூரில் பணியாற்றுகின்ற பெண் மேயர்.
ராஜஸ்தானில் குழந்தை பிறப்பதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பு வரை சிறிதும் தயக்கமின்றி , தனது பணியில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு உள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த பெண் மேயர் டாக்டர் சவும்யா குர்ஜார். ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் தன்னுடைய வேலையை நிதானமாக செய்து வந்துள்ளார்.

மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறைமாதமாக இருந்த போதிலும் நள்ளிரவு வரை கலந்து கொண்டு இருந்தார். திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தானும் தன் குழந்தையும் நலமுடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.