பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருச்சி மாவட்ட காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ,ஜியபுரம் உட்கோட்ட காவல்துறை மண்ணச்சநல்லூர் காவல் நிலையம், ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனம் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்டம் இணைந்து மண்ணச்சநல்லூர் சிவன் கோவில் திறந்தவெளி அரங்கில் கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் வரவேற்றார். திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதாரணி, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, வழக்கறிஞர் சாருமதி ஆகியோர் கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொதுமக்களும் காவல்துறையும் நல்லுறவுடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்கள். ஐடிஎஃப்சி பஸ்ட் பாரத் நிறுவன பொது மேலாளர் மேரிஅன்பரசி முகக்கவசம், சோப்பு ,சுவிட்காரம் ஆகியவைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாற்றுத்திறனாளிகள், திருநங்கை ,மூத்தகுடிமக்கள், முதியோர் ,நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், குழந்தைகள் ஆகியோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவன மேலாளர்கள் சிவா, சந்திரசேகர் , ஜான்பால்அசோக் ,சந்துரு, சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு ஒவ்வொரு ஊராட்சியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவை வலுப்படுத்தி குழந்தைகளின் பாதுகாப்பையும் ,பெண்களை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுடன் காவல் துறை இணைந்து சமுதாய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், காவலர்களும் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் நன்றி கூறினார்.

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios