2020 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டது. அதில் 1.3 பில்லியன் இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும் நிலையில் உள்ள 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. பில்கிஸ் பானோ (பிரபலமாக பில்கிஸ் தாதி என்று அழைக்கப்படுகிறார்) 2019 ஆம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ, 2019) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் முகமாக பில்கிஸ் தாதி ஆனார் .பில்கிஸ் தாதிக்கு கிட்டத்தட்ட 82 வயது.
2. இசிவானி ,இசைக்குழுவில் ஒரு தனித்துவமான கானா பாடகர். இந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த இடத்தில் அவர் பல ஆண்டுகளாக பாடி வருகிறார்.
3. மனசி ஜோஷி- மனசி கிரிஷ்சந்திர ஜோஷி ஒரு இந்திய பூப்பந்து விளையாட்டு வீரர். பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு 2019 இல் எஸ்.எல் 3 ஒற்றையர் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
4. ரிதிமா பாண்டே- ரிதிமா பாண்டே இந்தியாவைச் சேர்ந்த 11 வயது பெண் ஆர்வலர்.