போட்டோகிராபி என்பது இன்றைய கால கட்டத்தில் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. முன்னெல்லாம் குடும்பத்தோடு போட்டோ எடுப்பதற்கு ஸ்டுடியோ சென்ற காலம் போய் நொடிப்பொழுதில் செல்பி எடுக்கும் காலம் வந்துவிட்டது. இயற்கை காட்சிகளை படம் பிடிப்பதில் போட்டோகிராபர்கள் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனை ஊக்குவிக்கும் விதமாக, காட்டிற்குள் இருக்கின்ற இயற்க்கை காட்சிகளை தத்ரூபமாக படம் பிடிக்கும் போட்டோகிராபர்களுக்கு WILDLIFE PHOTOGRAPHY என்ற விருது கொடுக்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த WILDLIFE PHOTOGRAPHY என்ற விருதுஆஸ்திரேலியாவை சேர்ந்த ராபர்ட் இர்வின் எடுத்த புகைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் காட்டுக்குள் பற்றி எரியும் தீயை தத்ரூபமாக படம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.