இந்திய அரசாங்கம், புதன்கிழமை, ஆன்லைன் கலைக்களஞ்சிய விக்கிபீடியாவிடம் தனது தளத்திலிருந்து ஒரு வரைபடத்தை அகற்றுமாறு கேட்டுக் கொண்டது.

ஐ.டி சட்டப் பிரிவு 69 ஏ (டிஜிட்டல் தகவலுக்கான பொது அணுகலைத் தடுக்கும் சட்டம்) இன் கீழ் இணைப்பை நீக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விக்கிபீடியாவிற்கு உத்தரவிட்டது. இந்தியா-பூட்டான் உறவு குறித்த விக்கிபீடியா பக்கம் ஜம்மு காஷ்மீரின் வரைபடத்தை தவறாக சித்தரித்திருப்பதாகவும் எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ட்விட்டர் பயனர் ஒருவர் சுட்டிக்காட்டி அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆதாரங்களின்படி, நிறுவனம் மாற்றங்களைச் செய்யாவிட்டால், முழு தளத்தையும் தடுப்பது உட்பட, சட்ட நடவடிக்கைகளை அரசாங்கத்தால் எடுக்க முடியும். ஆன்லைனில் மிகப்பெரிய டிஜிட்டல் களஞ்சியங்களில் ஒன்றான விக்கிபீடியா, அதன் உள்ளடக்கங்களை பதிவேற்றவும், திருத்தவும் பயனர்கள் / தன்னார்வலர்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.