ஆன்லைன் கல்வி நிறுவனமான வைட்ஹட் ஜே. ஆர் ஆங்கிலம் பேசாத நாடுகளில் கணித வகுப்புகளைத் தொடங்க உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பெண் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது குறித்து வைட்ஹட் தலைவர் பேசியபோது நிறுவனம் இரண்டு வருடங்களில் இந்தியா மற்றும் பிற நாடுகளில் 1.5 லட்சம் மாணவர்களை சம்பாரித்ததாகவும், இதுவரை 11,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

மேலும் அடுத்த மூன்று வருடங்களில் ஒருவருக்கு ஒருவர் கற்றல் முறையை தொடங்க உள்ளதாகவும்
இதனால் 1 லட்சம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஐ. ஐ. டி மற்றும் ஐ. ஐ. ம்க்கு நிகரான ஊதியம் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். பகுதி நேர வேலையில் இருப்பவர்களோ அல்லது பட்டதாரி பெண்களோ விண்ணப்பிக்கலாம்.