
நிமிடத்தில் செய்திகளை பகிர்வதை போல பணத்தையும் பரிமாற வாட்ஸ் ஆப் விரும்புகிறது. இனி அனைத்து iOS மற்றும் Android பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.இந்த அம்சம் இன்று முதல் இந்தியாவில் கிடைக்கும் என்று வாட்ஸ் ஆப் அறிவித்தது. இந்தியாவில் தற்போது Paytm, PhonePe, Google Pay உள்ளிட்ட பல கட்டண பயன்பாடுகள் உள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மற்றும் ஜியோ பேமென்ட்ஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து முன்னணி வங்கிகளுடன் வாட்ஸ்அப் கூட்டு சேர்ந்துள்ளது. " வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப, இந்தியாவில் ஒரு வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பது அவசியம்.
பாதுகாப்பையும் தனியுரிமையையும் மேம்படுத்தும்வண்ணம், வாட்ஸ்அப் பயனர்கள் செய்யும் ஒவ்வொரு கட்டணத்திற்கும் யுபிஐ கேட்கும். புதிய அம்சத்தைப் பெற, பயனர்கள் அப்டேட் செய்ய வேண்டும்.