தமிழக அரசுடன் தன்னார்வ அமைப்புகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினார்கள்


தமிழக அரசுடன் EMPOWER TRUST, திருச்சிராப்பள்ளி மற்றும் HABITAT FOR HUMANITY INDIA இணைந்து கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இப்பிரசாரம் 24.08.2020 முதல் 27.08.2020 வரை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊறப்பாக்கம் பஞ்சாயத்து மற்றும் வண்டலூரில் துண்டு பிரசுரங்கள், முகக்கவசம் மற்றும் kabasura குடிநீர் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக EMPOWER TRUST மற்றும் HABITAT FOR HUMANITY INDIA சார்பில் திருமதி. புஷ்ப பாரதி, திருமதி. காயத்ரி, திருமதி. சில்வியா எலிசபெத், மற்றும் திருமதி. நிஷா ஆகியோர் தன்னார்வ லராக கலந்துகொண்டனர். அவர்களுக்கு காட்டாங்குலத்துர் நகர பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. லீமா ரோஸ் அவர்கள் பொது மக்களிடம் எப்படி பணியாற்ற வேண்டும், முகக் கவசம் முக்கியத்துவம், கபசுர குடிநீர் பருகுவதன் அவசியம், இலவச மருத்துவ முகாமில் மக்கள் பங்கு கொள்வதின் அவசியம் பற்றிய பயிற்சியை வழங்கினார்.


மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சரவணன் மற்றும் கிளார்க் திரு. கருணாகரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் பற்றிய துண்டு பிரசுரங்கள், ஊறப்பாக்கதிலுள்ள பிரியா நகர் பகுதி - 1, 2 & 3, மூகாம்பிகை நகர், பெரியார் நகர், பெரியார் nagar, சி நகரில் அமைந்துள்ள ஆறு தெருக்களிலும், கட்டபொம்மன் கன்னி அம்மன் கோவில் தெருக்களில்லும் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து kabasura குடிநீரும் மற்றும் முக கவசமும் வழங்கப்பட்டது. அதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேலும் ஊறப்பாக்கதில் இரண்டு மருத்துவ முகாம்கள் மற்றும் வண்டலூரில் முடிச்சூர் வாலாஜாபாத் மெயின் ரோட்டில் ஒரு மருத்துவ முகாம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் தன்னார்வலர்கள் பொதுமக்களை கலந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இறுதியாக, EMPOWER TRUST நிர்வாக இயக்குநர், முனைவர். கனிமொழி மற்றும் HABITAT FOR HUMANITY INDIA, இயக்குநர், அரசு தொடர்பு மற்றும் வீடு சேவைகள் பிரிவு, திரு . சாமுவேல் பீட்டர் இணைந்து கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசுடன் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்.

Recent Posts

See All

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்ய

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios