
சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உள்ள மலைகளில் மிக உயரமான மலை ஒலிம்பஸ் மோன்ஸ் ஆகும். இது முன்னர் செவ்வாய் கிரகத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு மாபெரும் எரிமலை. இதன் உயரம் 14 மைல் (அல்லது 21.9 கிலோமீட்டர்) என்றும் இது எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டரை மடங்கு உயரமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்திருக்கும் என்றும், அதன் பிறகு செவ்வாய் கிரகம் இப்போது வரை குளிர்ச்சியான சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில், கிரக புவியியலாளர்களிடையே ஒரு பொதுவான பார்வை என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் செயலில் எந்த எரிமலைகளும் இல்லை என்பதுவே.
இப்போது அந்த பார்வை அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள டேவிட் ஹார்வத் மற்றும் சக ஊழியர்களால் மாற்றப்பட்டு உள்ளது.
2018 ஆம் ஆண்டில், நாசா செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இன்சைட் என்ற ரோபோ லேண்டரை நில அதிர்வுகளைக் கண்காணிக்க வைத்தது.
கடந்த ஆண்டு, இந்த பகுதியில் தோன்றிய இரண்டு அதிர்வுகளை லேண்டர் அளவிட்டது. இது எரிமலை செயல்பாட்டை குறிக்கிறது, என்று ஹார்வத் மற்றும் சகாக்கள் கூறுகிறார்கள்.