வைட்டமின் பி3 புற ஊதா (யு.வி) கதிர்களிடமிருந்து தோல் செல்களைப் பாதுகாக்கக்கூடும். இது மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் அபாயத்தைத் குறைகிறது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.
"தினசரி உணவில் வைட்டமின் பி 3 இன் நுகர்வு அதிகரிப்பது, புற ஊதா வெளிப்பாட்டின் சில விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும், மேலும் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் தாக்கத்தைக் குறைக்கும் என்று எங்கள் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது" என்று லாரா காமிலோ, இத்தாலியின் தோல் பிரிவின் ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றார்.
வைட்டமின் பி 3 நிகோடின்னமைட் என்றும் சொல்லப்படுகிறது.புற ஊதா கதிர்வீச்சு டி.என்.ஏவை சேதப்படுத்துகிறது.நிகோடின்னமைட் டி.என்.ஏ வை சரி செய்கிறது என்று அவர் கண்டறிந்தார். மேலும் செல்லுலார் சேதத்தை குறைக்கிறது என்கின்றார்,லாரா காமிலோ.