சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் இன்டூ தி ஸ்பைடர் திரைப்படத்தின் முக்கிய வசனத்தை ஒரு வீடியோ கேம் பின்தொடர்கிறது. “யார் வேண்டுமானாலும் முகமூடியை அணியலாம்”என்ற வசனத்தை உண்மையாக்கும்படி வாட்ச் டாக்ஸ்: லெஜியன் என்ற வீடியோ கேம் முகமூடியை அணியும் கதாபாத்திரங்களை உருவாக்கி உள்ளது.

வீடியோ கேம் லெஜியன் மூன்றாவது டெக்னோ-டிஸ்டோபியா ஆகும். இந்த கேம் ஹேக்கர்களின் குழுவைப் பற்றியது. அவர்கள் மக்களின் ப்ரைவசி மற்றும் டேட்டா போன்றவற்றை அரசாங்கத்திடமிருந்தும் பேராசை கொண்ட மென்பொருள் உருவாக்குநர்களிடமிருந்து பாதுகாக்க அதிகாரத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். விளையாட்டு லண்டனில் நடப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல தாக்குதல்கள் நடக்கும் இந்த கேமில் அவற்றிக்கு பதிலளிக்கும் விதமாக, ஹேக்கர்கள் முகமூடி அணிந்து போராடுகின்றனர் . இந்த கேமில் உள்ள சிக்கல் என்னவென்றால், எல்லா கதாபாத்திரங்களும் குவியல்களாக இருக்கின்றன.தனித்துவமான ஆளுமைகளோ அல்லது இன்னொருவரிடமிருந்து தங்களை தனியாய் காட்டும் பண்புகளோ இல்லை. திரைப்படங்களைப் போலவே, கதை அடிப்படையிலான வீடியோ கேம்களிலும் அடையாளம் காண ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவம் தேவை.