இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக மாசுப்பாடு அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் எத்தனை நன்மைகள் வந்தாலும் கூட, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் நில மாசடைவதை தடுக்கும் வகையில் உத்தர பிரதேச அரசு ஒரு புதிய சட்டத்தை பிறப்பிக்க உள்ளது.
மருத்துவத்திற்கு நிகரான நிதி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு !!!
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க எலெக்ட்ரின் வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். தனது மாநிலத்தில் மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை போல எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எச்சில் துப்பினால் 1000 அபராதம்!!
நிலத்தை மாசுபடுத்தும் வகையில் ரோட்டில் எச்சில் துப்புதல், ரோட்டில் எச்சில் துப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது . அவ்வாறு ஈடுபடுவோருக்கு 1000 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.