ஒரு புதிய தனியார் நிதி வழங்கும் சுற்றில், சுமார் 100 மில்லியனை திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் யூடெமி ஈடுப்பட்டுள்ளது. அந்த நிதி வழங்கும் நிறுவனம் யூடெமியை 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்பிடலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கோவிட் -19 தொற்றுநோயால் அதிகமான மக்கள் வீட்டில் தங்கி ஆன்லைன் கற்றலைத் தேர்வுசெய்துள்ளதால், இந்த ஆண்டு சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட யூடெமியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஜூலை மாதம், மற்றொரு பெரிய ஆன்லைன் வகுப்பு வழங்குநரான கோர்செரா, 130 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக திரட்டியது.
யூடெமி தனது நுகர்வோர், தொழில் ஆகிய இடங்களில் அதன் தேவையை அதிகரித்துள்ளது. இதுவே100 மில்லியன் டாலர் வருவாய்க்கு காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் யூடெமி தனது பாதங்களை விரிவுபடுத்திவருகிறது.
