வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் (WSU) மானுடவியலாளர்கள் ஒரு பழங்கால வான்கோழி-இறகு கம்பளியை ஆராய்ந்தனர். அதில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான இறகுகளுடன், 200 கெஜம் யூக்கா ஃபைபரும் சுற்றிக் கொண்டு இருந்தது. தொல்பொருள் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் : "இன்சுலேடிங் ஊடகமாக வான்கோழி இறகுகளால் செய்யப்பட்ட போர்வைகள் அல்லது கம்பளிகள் இப்போது அப்லாண்ட் தென்மேற்குப் பகுதியில் உள்ள பியூப்லோ மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி யாரும் அறியவில்லை, என்று இணை ஆசிரியர் பில் லிப் கூறினார். ஆசிரியர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற போர்வைகளுக்கான இறகுகள் பறவைகளின் உடல் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. சரியாக 11,500 வான்கோழி இறகுகள் ஒரு முழுமையான கம்பளி செய்ய தேவைப்படும். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் போர்வைகளுக்கு முயல்களின் தோலே பயன்படுத்தப்பட்டன. பின்பு வான்கோழி இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இறகுகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டன என்பதைப் பொறுத்தவரை, லிப் மற்றும் துஷிங்ஹாம் மூன்று சாத்தியங்களை மேற்கோள் காட்டினர்: பறவைகள் கொல்லப்பட்டு அவற்றின் இறகுகள் பறிக்கப்பட்டன; பறவைகளின் இயற்கையான உதிரும் பருவத்தில் இறகுகள் சேகரிக்கப்பட்டன; அல்லது மக்கள் வான்கோழிகளிடமிருந்து முதிர்ந்த இறகுகளைத் தேர்ந்தெடுத்தனர். 1100 முதல் 1200 வரை வான்கோழிகள் ஒரு முக்கிய உணவாக மாறவில்லை. அவை உணவானவுடன் அவற்றை இறகிற்காக கொல்வதை நிறுத்தி விட்டனர்.