கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன; வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன;பயங்கரமான துருக்கி நிலநடுக்கத்தைப் படம்பிடித்த சிசிடிவி வீடியோக்கள்
இஸ்மீர் அருகே உள்ள ஒரு நகரத்தின் தெருக்களில் தண்ணீர் ஓடுவதைக் சமூக ஊடகங்களில் உள்ள படங்கள் காட்டியது.
துருக்கியின் மேற்கு கடற்கரை மற்றும் கிரேக்கத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கேமராவில் படமாக்கப்பட்ட வீடியோ, கடலோர நகரங்களில் நீர் பாய்வதையும், மக்கள் பீதியுடன் கட்டிடங்களுக்கு வெளியே ஓடுவதையும் காட்டியது.
ஒரு உணவகத்தின் சமையலறைக்குள் இருந்து வந்த சி.சி.டி.வி காட்சிகளில், 7.0 மாக்னிட்யூட் அளவைக் கொண்ட பூகம்பம் கட்டிடத்தை உலுக்கியதால் ஊழியர்கள் அச்சத்தில் மேஜைக்குக்கீழ் இருப்பதைக் காட்டியது.
ஒரு காலத்தில் கட்டிடம் இருந்த இடத்தில் இடிந்த கட்டிட குப்பைகளின் பெரிய குவியல்களை வான்வழி காட்சிகள் காட்டின.பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்த நகரத்தின் பல்வேறு
பகுதிகளிலும் புகை சூழ்ந்துஇருந்தது.
