
பள்ளித் தேர்வுகளுக்கு வரும்போது நல்ல மதிப்பெண்களை பெற சில நியாயமற்ற வழிகளைப் பின்பற்றும் மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மாணவரின் காகிதத்தை வெறுமனே பார்ப்பது முதல், தண்ணீர் பாட்டில் லேபிளின் உட்புறத்தில் பதில்களை எழுதுவது வரை, இத்தகைய செயல்கள் ஆன்லைன் தேர்வுகளிலும் தொடர்கிறது.
ஒரு ஆன்லைன் வகுப்பில், ஒரு ஆசிரியர் பெரிய கோப்புறையை அனுப்பினார். அதன் தலைப்பில் 'பரீட்சைக்கான பதில்கள்- மாணவர்களுக்காக இல்லை' என்ற இருந்தது. கோப்பு தவறுதலாக இணைக்கப்பட்டதுப்போல் தெரிந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்றதை மாணவர்கள் வீடியோவில் விவரிக்கின்றனர். மாணவர்களில் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: "நான் அனைத்து பாடப் பொருட்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன், அது 'பரீட்சை பதில்கள் மாணவர்களுக்கு அல்ல' என்று இருந்ததைப் பார்த்து. "நான் ஆச்சரியப்பட்டேன், தவறாக அனுப்பி விட்டார்களா? என எண்ணினேன். எனவே நான் அதைக் கிளிக் செய்தேன் ..." ஆனால் பதில்களின் புதையலை மாணவர்களுக்கு வழங்கும் கோப்பைத் திறப்பதற்குப் பதிலாக, அது யூடியூபிற்கு சென்றது. ரிக் ஆஸ்ட்லியின் 'நெவர் கோனா கிவ் யூ அப்' என்ற இசை வீடியோ இசைத்தது.
இந்த பேராசிரியரின் நகைச்சுவை உணர்வை மாணவர்கள் மிகவும் நேசித்தாக கூறுகின்றனர்.