மேற்கு வங்காளத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் 80 பேர் வசிக்கும் பழங்குடி கிராமமான லால்பஜார் ஒரு கலை கிராமமாகும். மண் வீடுகளின் சுவர்கள் எல்லாம் பிரகாசமான வண்ணங்களால் வரையப்பட்டவை. அதில் அன்றாட வாழ்க்கையின் காட்சிகளான ஆடுகளை மேய்வது, பழங்குடி நடனங்கள், ஒரு பழத்தோட்டத்தில் விவசாயிகள், விளையாடும் குழந்தைகள் ஆகியவை அடங்கும்.

மற்றொரு சுவரில் இந்த பழங்குடியினரின் திருமண சடங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அங்கு மணமகன் கூரையிலிருந்து குதித்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். மணமகள் என்றென்றும் அவருடன் இருப்பேன் என்று கூறுவார். இந்த காட்சி வரையப்பட்டுள்ளது.கலைப்பொருட்கள் விற்கப்படும் கண்காட்சி இடங்களும், குழந்தைகள் வண்ணம் தீட்ட கற்றுக்கொள்ளும் ஒரு பட்டறையும் கிராமத்தில் உண்டு. கொல்கத்தா ஓவியரும் சிற்பியுமான மிருனல் மண்டல் என்பவரின் வருகை மண் குடிசைகளை மாற்றியமைக்க வழிவகுத்தது. அவர் முதன்முதலில் 2014 இல் கிராமத்தை பார்வையிட்டுள்ளார். கிராமத்தில் ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறுதல் மட்டுமே உள்ளது. அவர் குழந்தைகளுக்கு இலவசமாக வரைதல் வகுப்புகள் நடத்த தொடங்கினார். அவருடன் சேர்ந்த சக கலைஞர்கள் சுவர்களை வரைய கிராமத்தினரிடம் அனுமதி கேட்டனர். "அவர்கள் முதலில் ஒரு சுவரை வரைவதற்கு எங்களுக்கு அனுமதித்தனர், பின்னர் மூன்று. இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டளவில், அனைத்து வீடுகளும் வர்ணம் பூசப்பட்டன. வீடுகள் ஒவ்வொரு ஆண்டும் மண்ணால் மீண்டும் உருவாக்கப்படுகின்றன, எனவே அனைத்து ஓவியங்களும் ஒவ்வொரு ஆண்டும் வரையப்படுகின்றன.