நீங்கள் இந்தியாவில் இருந்தால், பொது இடங்களில் குப்பை கொட்டுவது வழக்கமான செயல். ஆனால் சமீபத்தில், இரண்டு பயணிகள் குப்பை கொட்டியதற்காக தலைகுனிந்து உள்ளனர். அக்டோபர் 30 ஆம் தேதி, இருவரும் தென்னிந்திய நகரமான மடிகேரியில், தங்கள் காரில் இருந்து சாலையில் பீஸ்ஸா பெட்டிகளை வீசினர்.

கோடகு சுற்றுலா சங்கத்தின் பொதுச் செயலாளர் திம்மையா பிற்பகல் 2:15 மணியளவில் சாலையில் வீசப்பட்ட பெட்டிகளைக் கண்டார்.அக்டோபர் 28 ஆம் தேதி, கிராம பஞ்சாயத்தின் சில உறுப்பினர்களின் உதவியுடன் திம்மையா அந்தப் பகுதியை சுத்தம் செய்திருந்தார்.
அந்த குப்பையில் பயணிகளின் தொலைபேசி எண்ணுடன் ஒரு ரசீது கிடைத்தது. பின்னர் அவர்களை அழைத்து, திரும்பி வந்து சாலையில் இருந்து குப்பைகளை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் மறுத்ததால், அவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.திரும்பி வந்து குப்பைகளை சேகரிக்க பயணிகளுக்கு பல எச்சரிக்கைகளை வழங்கிய பின்னர், 80 கிலோமீட்டர் திரும்பி வந்து குப்பைகளை எடுத்து சென்றனர்.