நிலத்திலும் பயணம்.. நீரிலும் பயணம்...இரு சக்கர வாகனம் கலக்கல்..!ஆனாலும், நம்ம பசங்க... இந்த கொரானா-ல ஒரு கண்டுபிடிப்பாளரா ஆகிட்டு வாங்க

பா...!

ஆம், மக்களே...


இனி நீரிலும் உங்கள் இரு சக்கர‌வாகன சாகசம் நிகழ்த்த முடியம்.

அதற்கு வழிவகை செய்துள்ளார், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர்.


சேலம் மாவட்டம் ,‌இடும்பன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சிங்காரவேல் – பூங்கொடி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இதில் மூத்த மகனான தட்சிணாமூர்த்தி மேட்டூர் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார். இவர் தொடர்ந்து பல அறிவியல் சிந்தனைகளோடு பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, கார்பைட் கல் மூலம் கிடைக்கும் எரிவாயுவை கொண்டு இரு சக்கர வாகனம் இயக்கம், ஷாக் அடிக்காத மின்சாரம் மூலம் மின்சாதனம் இயக்குதல், போன்ற கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.


தற்பொழுது கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தட்சணாமூர்த்தி 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தை நிலத்திலும் தண்ணீரில் இயக்கக்கூடிய வகையில் அதனை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளார். ஹீலியம் மேலும், எரிவாயுவை பயன்படுத்தி ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios