
திருநங்கைகள் பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப், மற்றும் எஸ்.எஸ்.பி போன்ற துணை ராணுவப் படைகளில் சேர முடியும்.
ஒரு வரலாற்று நடவடிக்கையாக, நாட்டின் 3 துணை ராணுவப் படைகளில் திருநங்கைகளின் அணி ஒரு பகுதியாக பங்கேற்க்கும். இது குறித்து துணை ராணுவப் படையினரின் கருத்துக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டதற்கு, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் மற்றும் எஸ்எஸ்பி ஆதரவுக் தெரிவித்துள்ளனர்.
சென்ட்ரல் ரிசர்வ் போலிஸ் படை (சிஆர்பிஎஃப்) தனது படையை தகுதியான புதிய ஆட்களுடன் மாற்றத் தயாராக உள்ளதாவும், உச்சநீதிமன்றம் கூறியது போல் பாலின-நடுநிலை வேலை சூழலின் உணர்வை முழுமையாக மதிப்பதாகவும் கூறியுள்ளது. எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) ஒரு உறுதியான பதிலையும், எஸ்.எஸ். தேஸ்வால் பி.எஸ்.எஃப் இயக்குநர் ஜெனரலும், இந்தோ-திபெத் எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) தலைவரும், இந்த நடவடிக்கை குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.
உதவி கமாண்டன்களின் அதிகாரி கேடர் பதவிக்கு திருநங்கைகளை நியமிக்க தயாராக இருப்பதாக சாஷஸ்திர சீமா பால் (எஸ்.எஸ்.பி) தெரிவித்துள்ளது. ஐ.டி.பி.பி மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) ஆகிய 2 படைகள் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்த ஆண்டு டிசம்பரில் திட்டமிடப்படி ஆட்சேர்ப்பு இயக்கத்தில் திருநங்கைகளை 3 வது பிரிவில் சேர்க்க உள்ளது.