எத்தனை ஆப் வந்தாலும் டிக் டாக் என்ற செயலியை யாராலும் மறக்க முடியாது. டிக் டாக் என்ற ஆப் மூலமாக தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர். இது சமூக வலைத்தளங்களில் அதிகமான வரவேற்பை பெற்றது. இந்த டிக் டாக் ஆப் மூலமாக பிரபலம் அடைந்து, சின்னத்திரை , வெள்ளித்திரையை சென்று அடைந்தவர்களும் உண்டு.
இது சீனாவால் தயாரிக்கப்பட்ட ஆப் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதை தாங்கி கொள்ள முடியாத டிக் டாக் வாசிகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொஜ் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் அது டிக் டாக் போல் எளிதாக இல்லை என்பது பெரும்பாலான டிக் டாக் வாசிகளின் ஏக்கமாகவே இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 17 வயது இந்திய சிறுமி டிக் டாக்கை போலவே தீக்தாக் எனும் செயலியை கண்டுபிடித்துள்ளார். இந்த ஆப் டிக் டாக்கில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த ஆப்பில் இருப்பதால், டிக் டாக் வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.