சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி இடத்தை வகுத்திருப்பது வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ் புக் , ட்வீட்டர் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள். இவற்றுள் தனி இடத்தை பிடித்து ஒரு காலத்தில் மாஸ் காட்டியது என்றால் அது டிக் டாக் எனும் செயலி தான்!!
டிக் டாக் செயலி மூலமாக டிக் டாகெர்ஸ் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்த செயலி மூலமாக சின்ன திரை மற்றும் வெள்ளித்திரைக்கு சென்றவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இந்திய கிழக்கு லடாக் எல்லையில் நிகழ்ந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்திய அரசு சீனாவின் 50க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் டிக் டாக்கும் ஒன்று.
இந்த டிக் டாக் ஆப்பிற்கு பதிலாக எவ்வளவு செயலிகள் வந்தாலும் அது டிக் டாக் அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான டிக் டாக்வாசிகளின் பரவலான கருத்து. இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு பின்னர் டிக் டாக் தன்னுடைய பெரும்பாலான பயனர்களை இழந்துவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கின்ற தன்னுடைய போட்டி நிறுவனமான கிலான்சுக்கு விற்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்தால் டிக் டாக் மீண்டும் இந்தியாவிற்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. இதை கேட்ட டிக் டாக்வாசிகள் பேரார்வட்த்தோடு டிக் டாக்கின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.