கடந்த 2015 ஆம் ஆண்டு அசாமிலிருந்து மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலுக்கு ஒரு யானை கொண்டுவரப்பட்டது. இந்த யானை 2017 ஆம் ஆண்டு யானைப்பாகனின் உதவியாளரை கடுமையாக தாக்கியது, யானையை பரிசோதித்த மருத்துவர்கள் யானையை காற்றோட்டமான இடத்தில் பராமரிக்குமாறு ஆலோசனை வழங்கினர்.
இதனை தொடர்ந்து இந்த யானைக்கு திருப்பரங்குன்றம் அருகே 10 லட்சம் செலவில் நீச்சல் குளம் கட்டப்பட்டது. இதன் பிறகு கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த யானை பாகங்கள் இரண்டு பேரையும் கடுமையாக தாக்கியதில் ஒருவர் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் நன்கு பயிற்சி பெற்ற பாகனை பராமரிக்க வைக்குமாறு அறிவுறுத்தினர்.

நன்கு பயிற்சி பெற்ற பாகன்கள் பராமரித்து வந்த பிறகு, வந்த புதிய பாகன்களையும் இந்த யானை கொன்று விட்டது. இந்நிலையில் சரியான சிகிச்சைக்கு பிறகு இந்த யானை மீண்டும் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள யானைகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளது,. மேலும் திருப்பரங்குன்றத்திற்கு விரைவில் அழைத்து வரப்படும் என கூறப்படுவதால் கோவிலில் உள்ள பக்தர்கள் கடும் பீதியில் உள்ளனர்.