
நினைவாற்றலை அதிகரிக்க நிறைய வழிகள் உள்ளன..
காலையில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யலாம்,
வால்நட் பாதாம் போன்றவற்றை சாப்பிடலாம்,
வெண்டைக்காய் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்,
மாலையில் நன்கு விளையாட வேண்டும்,
படங்களைப் புரிந்துக் கொண்டு படித்தால் மறக்கவே மறக்காது.
கைபேசி
குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கணினியும் கைப்பேசியும் கொடுத்து அவர்களின் நினைவாற்றல் திறனைக் குறைந்து விடுகிறோம். அதனை மேம்படுத்த வீட்டிலேயே வார்த்தைகளை வரிசைப்படுத்துதல், ஒரு படத்தின் பாகங்களைக் கொடுத்து அதை வரிசைப்படுத்துதல் போன்ற விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
தாயம் ஆடுபுலி ஆட்டம்
நம் கிராமத்து விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்றவை வெறும் விளையாட்டு மட்டுமல்ல.. அவற்றால் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தலாம். வீட்டில் காய்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி அதைப் பிள்ளைகளிடம் கொடுத்து எண்ணச் சொன்னால் அங்கு எண்களை எளிதாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்
பள்ளிப்பாடங்களை நம் வாழ்வியலோடு இணைத்துக் கூறுங்கள். உங்கள் குழந்தை மறக்கவே மறக்காது.
சதுரங்கம்
சதுரங்க விளையாட்டுக் குழந்தைகளின் நினைவாற்றலைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்த பிள்ளைகளை திட்டமிட பழக்குங்கள். வாய்ப்பாடு படித்தது நினைவு இருக்கிறதா. இன்று குழந்தைகள் அதை மனப்பாடம் செய்கிறார்கள். அதை எளிய முறையில் படித்தால் காலத்துக்கும் அது மறக்கவே மறக்காது.