• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

தேங்காய் தினம் உள்ளது; ஆனால் தேங்காய் எங்கே....!!!?

என்னடா இது, தேங்காய் பிறந்த நாள்-ல தேங்காய்-கு வந்த சோதன


ஆம், மக்களே, 2009ஆம் ஆண்டு முதல் செப்.2 உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன்படி, இந்த வருடமும் தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது.

தேங்காய் தினம் உள்ளது; கொண்டாட தேங்காய் தான் இல்லை

ஆம், ஒரு காலத்தில் தேங்காய் உற்பத்தி உயர்ந்து காணப்பட்டது. தற்பொழுது, முற்றிலும் குறைந்துள்ளது என கீழ்வரும் புள்ளிவிவரம் நமக்கு உணர்த்துகிறது.


இந்தியாவில் தேங்காய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.


கேரளாவில் ஆண்டுக்கு 7448.65 மில்லியன், கர்நாடகா 6773.05 மில்லியன், தமிழ்நாடு 6570.63 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், உற்பத்தித்திறனை பொறுத்தவரை கேரளா மிகவும் பின்தங்கியுள்ளது. கேரளாவில் தேங்காய் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 8,500க்கும் குறைவாக உள்ளது. ஆனால், இதில் தமிழ்நாடு (14,251), குஜராத் (13,775), கர்நாடகா (13,181), மேற்கு வங்கம் (12,641) ஆகியவை முன்னணியில் உள்ளன. கேரளாவில்,. 1950ல் தென்னை சாகுபடி 4.10 லட்சம்

ஹெக்டேராக இருந்தது.


2001ம் ஆண்டில் இது 9 லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. தற்போது இது படிப்படியாக குறைந்து வருகிறது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios