• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இந்திய கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர 30 ஆண்டுகளாக உழைத்த மனிதர்

கயா, பீகார் - கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக, ராம் ரதி தேவி தனது கணவர் லாங்கி பூயாவை "பைத்தியம்" என்றே அழைத்தார், அவர் எல்லாவற்றையும் முயற்சித்து பார்த்தார், தனது கணவருக்கு உணவை மறுத்தும், தங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தவும் படி கூறியும், பூயா கேட்கவில்லை.

கயா கிட்டத்தட்ட 750 பேர் வசிக்கும் குக்கிராமம்.ஒரு சிறிய நிலத்தை சொந்தமாகக் கொண்ட பூயா, எப்போதும் மலைகளில்

ஓடும் நீரோடைகளை தனது கிராமத்திற்கு திருப்பிவிட ஒரு கால்வாயைத் தோண்டிவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதன் படியே உறுதியாக 30ஆண்டுகள் தோண்டினார்

கடந்த மாதம், உள்ளூர் பத்திரிகையாளர் ஜெய் பிரகாஷ் சென்றிருந்தபோது, ​​பூயா அவரிடம் வந்து, அவர் தோண்டிய கால்வாயைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். பூயாவின் செயல் கண்டு வியந்த ஜெய் பிரகாஷ் தனது பத்திரிகையில் இதனை வெளியிட எண்ணினார்.

செப்டம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் இந்தி செய்தித்தாளில் பிரகாஷின் செய்தி வெளியானவுடன், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பூயாவைச் சந்திக்க வந்தனர்.

பூயாவால் 3 கி.மீ (1.86 மைல்) நீளமுள்ள ஒரு கால்வாயைத் தோண்ட முடிந்தது, ஆனால் அதை மலைகளுக்குமேல்நோக்கி கொண்டு வர முடியவில்லை.அவரது முயற்சிகள் பற்றிய செய்தி பரவியதும், பீகார் மாநில நீர் அமைச்சர் சஞ்சய் ஜா அதைப் பற்றி அறிந்து, கால்வாயை பூயா கிராமம் வரை நீட்டிக்க உத்தரவிட்டார்.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேன்கைண்ட் பார்மா அவருக்கு 1,00,000 ரூபாய் வழங்கியது. மேலும் கயா கிராமத்தில் இந்த வருடம் கோதுமை விளைந்தது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios