பிரம்மாண்டமான குமிழ்கள் எப்போதும் தி ஃப்ளேமிங் லிப்ஸ் கச்சேரியின் ஒரு சிறப்பம்ச பகுதியாகும். இசைக்குழுவின் முன்னணி பாடகரான வெய்ன் கோய்ன், ஒரு குமிழினுள் இருந்து இசை நிகழ்ச்சிகளில் பாடுவார். அவர் குமிழிக்குள் இருக்கும்போதே கூட்டத்தில் உலாவுவார். பார்வையாளர்களிடம் குமிழியை உருட்ட உதவி கேட்பார். இத்தகைய விசித்திரமான செயல்களை இக்குழு தொடர்ச்சியாக செய்து வருகிறது. இது ஒரு வகையான வர்த்தக முத்திரையாக மாறியுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் அமெரிக்க இலாப நோக்கற்ற ஊடக அமைப்பான என்.பிஆர் அதன் சின்னமான டைனி டெஸ்க் நிகழ்ச்சிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தபோது, ஃப்ளேமிங் லிப்ஸ் என்ன செய்ய உள்ளது என்பதைப் காண மக்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
அவர்கள் இந்த முறையும் குமிழிகளுள் இருந்தனர். தனித்தனி குமிழிகளுக்குள் வாசிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் சுய-தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில், இசைக்குழு சமீபத்தில் வெளியான 16 வது ஸ்டுடியோ ஆல்பமான அமெரிக்கன் ஹெட் பாடலில் இருந்து புதியவற்றை உள்ளடக்கிய ஒரு குறுகிய பாடலை உருவாக்கி பாடியது.
சில நாட்களுக்குப் பிறகு, இசைக்குழு தங்கள் சொந்த ஊரான ஓக்லஹோமா நகரத்தில் மற்றொரு நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தியது. எனினும் அவர்கள் கூட்டத்தில் உலாவவில்லை. இந்த முறை அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களும் குமிழிக்குள் இருந்ததாக கோய்ன் வேடிக்கையாகக் கூறினார்.