
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 150 லட்சம் கோடியை கடந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இத்தகைய மைல்கல் எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதப்பு 1 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது. நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 468.65 டாலர்களாக இருந்தது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டது.