கிரிக்கெட்டில் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் டோனி IPL மூலம் அதிகமாக பணம் சம்பாதித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். IPL போட்டிகளில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியதால் மூலம் 150 கோடிகளுக்கு மேல் சம்பாதித்து உள்ளார். 2021 IPL க்கும் சென்னை அணி ரிட்டைன் செய்துள்ளதால் இந்த சாதனையை படைத்துள்ளார் தோனி.

2020 ஆண்டு வரை நண்டாந்த IPL போட்டி வரை டோனி 137 கோடி வரை பெற்று இருந்தார். டோனி விளையாடிய 204 IPL போட்டிகளில் 4632 ரங்களையும், 216 சிக்ஸர் களையும் குவித்துள்ளார். தோனிக்கு அடுத்த படியாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 146 கோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.