அமேசான், கூகுள் ஹோம் போன்றவற்றை மக்கள் பரிசாக கொடுக்க தொடங்கிய சில நாட்களிலேயே இன்னும் பல தொழில்நுட்ப பரிசுகள் வரிசையில் சேர்ந்து விட்டன.
ஃப்ளூமின் ஸ்மார்ட் வாட்டர் சென்சார்: நீங்கள் எவ்வளவு தண்ணீரை உபயோகிக்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்கும் திறனும் உங்கள் வீட்டின் பிளம்பிங்கில் ஏற்படும் கசிவுகள் குறித்து உங்களை எச்சரிக்கும் திறனும் கொண்டது. நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஃப்ளூம் ஸ்மார்ட் ஹோம் வாட்டர் மானிட்டரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் முன்பை விட திறமை வாய்ந்ததாக உள்ளது. விலை: அமேசானில் $ 199
இந்த விடுமுறை காலத்தில் நெட்ஜியர்ஸ் மெரல் என்ற கலை பரிசை உங்கள் நண்பர்களுக்கு வழங்குங்கள். வீட்டில் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்படகூடிய திரை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வரலாறு சிறப்புமிக்க சிறந்த ஓவியங்களை உங்கள் வீட்டில் காண்பிக்கும். நிச்சயமாக, உரிமையாளர் தங்கள் சொந்த ஓவியங்களையும் காட்சி படுத்தலாம். விலை: நெட்ஜியர் இணையத்தில் 299 டாலரில் இல் தொடங்குகிறது.
நானோ லீஃப்: நீங்கள் பேனல்களை ஒன்றாக இணைத்தவுடன், அவற்றை ஹோம்கிட், அலெக்சா, கூகிள் ஹோம் உடன் இணைக்கலாம். வெளியில் உள்ள வானிலை அடிப்படையில் உங்கள் வீட்டில் விளக்குகளை அமைக்கும். இதன் விலை 150-200 டாலர் முதல் தொடங்குகின்றது.
