• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

சுவையை உணரும் எண்காலி(ஆக்டோபஸ்)

ஆக்டோபஸ்கள் தங்கள் கைகளில் உயிரணுக்களின் சென்சார்களைக் கொண்டுள்ளன.எதைத் தொடுகிறது என்பதையும், அந்த பொருள் அதன் இரையா என்பதையும் கண்டுபிடிக்க இந்த சென்சார்கள் உதவுகிறது.

ஆக்டோபஸின் நியூரான்களில் மூன்றில் இரண்டு பங்கு அதன் கைகளில் அமைந்துள்ளது. அவை மூளையில் இருந்து ஓரளவு தனிப்பட்டு சுதந்திரமாக இயங்குகின்றன. அதனால்தான் ஆக்டோபஸ் கை துண்டிக்கப்பட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இயங்கும்.

ஆக்டோபஸ் ஒரு பொருளைத்தொடும்போது வித்தியாசமாக பாவனை காட்டுவதாக பெலோனோ மற்றும் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆக்டோபஸின் உறிஞ்சிகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வகத்தில் உள்ள ஆக்டோபஸ்களை சோதித்தனர்.அவையும் அந்த மூலக்கூறுகளுக்கு பதிலளித்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க, அதே பொருட்களை தங்கள் தொட்டிகளின் தளங்களில் வைத்தார்கள். ஆக்டோபஸால் நீரில் கரையக்கூடிய மூலக்கூறுகளை மட்டுமே உணரமுடிகிறது என்பது தெரியவந்துள்ளது.

மேற்பட்ட ஆய்வு தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த உயிரினம் கண்டறியக்கூடிய பிற இயற்கை மூலக்கூறுகளைக் கண்டுபிடிக்க நாங்கள் இப்போது முயற்சிக்கிறோம், என்று பெலோனோ கூறினார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios