தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் ஆசிய அளவில் நடைபெற்ற ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலகத்தில் எந்த மூலையில் எந்த போட்டி நடந்தாலும் அதில் இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரின் வெற்றி கண்டிப்பாக இருக்கும் என்பது தமிழ் சமூகத்திற்கு உரித்தான ஒன்றாகும்.
அதற்கேற்ற வகையில் ஆசியாவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற 24 இந்திய வீரர்கள் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது இந்தியாவை பெருமை அடைய செய்கிறது.
இந்த போட்டியில் " மென்ஸ்ட்ரப்" என்ற ஈவெண்ட்டில் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.10 மீட்டர் ஏர் பிஸ்டல் , ஏர் ரைபிள், மென்ஸ் டிராப், வுமன்ஸ் டிராப் போன்ற பிரிவுகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிசுகளை தட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
