இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படும் 2019-20க்கான மதிப்புமிக்க ‘ஸ்வர்ணஜெயந்தி பெல்லோஷிப்’ விருதுகளுக்கு சென்னை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ) மெட்ராஸ் ஐ.ஐ.டி யைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த அங்கீகாரத்திற்காக நாடு முழுவதும் 21 ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் ஆசிரியர் பிரபு ராஜகோபால் ‘பொறியியல்' பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டார். வேதியியல் துறையின் இணை பேராசிரியர் பி.அன்பரசன், ‘வேதியியல்' பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளைத் தொடர அவர்களுக்கு சிறப்பு உதவிகளும் ஆதரவும் வழங்கப்படும்.
ஆசிரியர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்த போது"மதிப்புமிக்க ஸ்வர்ணஜயந்தி பெல்லோஷிப் விருது ஒரு மிக முக்கியமான மைல்கல் ஆகும்.மேலும் இது பரந்த ஆதரவைப் பெறவும், எங்கள் முயற்சிகளை அதிகரிக்கவும் உதவும் என்பது உறுதி", என்றனர்.