• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஒருவழியாக சூரியனை பார்த்தாச்சு!!!

உலகின் மிகப்பெரிய சூரியக் கண்காணிப்பகமான டேனியல் கே. இனோயே(டி.கே.ஐ.எஸ்.டி,) சூரிய ஒளியின் முதல் உருவப்படத்தை வெளியிட்டுள்ளது. சூரிய இயற்பியல் இதழில் ஆராய்ச்சியாளர்கள் படத்தை வெளியிட்டனர். சூரிய புள்ளிகள் என்பது காந்தப்புலப் பாய்ச்சலால் உருவாக்கப்பட்ட சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் இருண்ட புள்ளிகள். அங்கு காந்தப்புலங்களின் ஒருங்கிணைப்பு, வெப்பச்சலனத்தைத் தடுக்கிறது மற்றும் சூரியனின் மேற்பரப்பை குளிர்விக்கிறது. படத்தில், சூடான மற்றும் குளிர்ந்த வாயு சூரிய புள்ளியின் விளிம்பிலிருந்து வெளிப்புறமாகச் செல்வதைக் காணலாம்.

சூரியன் ஒரு சுழற்சி செய்ய 11 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். அதன் சுழற்சியின் போது சிலநேரங்களில் சூரிய செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் நடைபெறும். சூரிய செயல்பாடு மிக அதிகமாக இருக்கும்போது, ​​சூரியனின் மேற்பரப்பு அதிக சூரிய புள்ளிகளால் நிரம்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios