• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மக்காத பிளாஸ்டிக், இனி மக்கும்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவரின் ஆவணப்படம், 10 வது தேசிய அறிவியல் திரைப்பட விழாவில் (என்எஸ்எஃப்எஃப்ஐ) வெண்கல விருதை பெற்றுள்ளது. முதுகலை மின்னணு ஊடக மாணவர் பொன்னலா ராகவேந்தர் தயாரித்த - ‘தீர்வு’ என்ற ஆவணப்படம், தேன் கூடுகளில் வாழும் மெழுகு புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை மக்கும் திறன் கொண்டவை என்பது குறித்து ஆராய்ச்சி அறிஞர் (சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்) ஹர்ஷாவின் பணிகளை விவரிக்கிறது.

பூச்சி லார்வாக்களின் குடல் / செரிமானப் பாதையில் உள்ள நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை எவ்வாறு ஜீரணிக்கின்றன என்பது குறித்து ஹர்ஷா ஆராய்ச்சி செய்கிறார். இந்த புழுக்களால் ஜீரணிக்கப்படும் நீண்ட சங்கிலி ஹைட்ரோகார்பன்கள் குறித்த ஆராய்ச்சி, பிளாஸ்டிக் மாசுபாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்கும் ”என்று ஹர்ஷா கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios