எடை இழப்புத் தீர்மானங்களுக்கான பிரதான மாதம் ஜனவரி. பெரும்பாலானவர்கள் எடைஇழப்பு தீர்மானங்களை எடுப்பீர்கள்.மேலும் உங்களில் சிலர் ஊரடங்கின் போது பெறப்பட்ட கூடுதல் கிலோக்களை பற்றி கவலை கொண்டு இருப்பீர்கள். நன்று. எனினும் அதற்கு உங்களுக்கு ஒரு கலோரி எண்ணும் செயலி தேவையில்லை.

பல கலோரி எண்ணும் செயலியுடைய சிக்கல் அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதில்தான். பொதுவாக ஆன்-போர்டிங் செயல்முறை உங்கள் உயரம், தற்போதைய எடை, இலக்கு எடை, செயல்பாட்டு நிலை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை உள்ளிட கேட்கும். அங்கிருந்து, உங்கள் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தை (பிஎம்ஆர்) கணக்கிட பயன்பாடு சில பார்முலாக்களை பயன்படுத்தும். ஒருவேளை நீங்கள் நாள் முழுவதும் படுத்துக்கொண்டிருந்தால், உங்கள் பி.எம்.ஆர் உங்கள் உடல் உள்உறுப்புகள் உழைத்ததிற்கான கலோரிகளின் எண்ணிக்கையாக மட்டுமே இருக்கும்.இந்த சூழ்நிலையில் எண்ணிக்கைகள் பெரிதும் மாறுப்படும். இன்டேரெக்ட் கலோரிமீட்டர் பயன்படுத்தினாலே இந்த கணக்குகள் துல்லியமானதாக இருக்கும் இல்லையெனில் அதிகமான கலோரிகளோ குறைவான கலோரிகளோ உட்கொள்ள நேரிடும்.