"தயவுசெய்து உங்கள் வாகனத்திற்குள் இருங்கள்." ஒரு கண்காட்சியின் நுழைவாயிலில் ஒருவர் கேட்க எதிர்பார்ப்பது இதுவல்ல, ஆனால் மியூசியோ ஆட்டோசர்வீசியோ கண்காட்சியில் இது ஒரு கட்டாய விதிமுறை. கண்காட்சியின் வாயிலில் பொருள்கள் மிரரில் தோன்றுவதை விட நெருக்கமாக உள்ளன (லாஸ் ஆப்ஜெட்டோஸ் என் எல் எஸ்பெஜோ எஸ்டான் மாஸ் செர்கா டி லோ க்யூ பரேஸ், ஸ்பானிஷ் மொழியில்) என்று எழுதியிருக்கும். இது தான் கண்காட்சியின் தலைப்பு. 20 க்கும் மேற்பட்ட சமகால கலைஞர்களின் 30 க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சி காட்டுகிறது. ஒவ்வொரு காட்சியை பார்த்துக் கொண்டும் ஒருவர் எவ்வளவு நேரம் நிற்கிறார் என்பதைப் பொறுத்து முழு சுற்றுப்பயணமும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செல்லும் என கணிக்கப்படுகிறது. இத்தகைய முயற்சி, உடல் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை ஊக்குவிக்கும்.
