ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹைதராபாத் வட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 15 புலிகளை ஒரு வருட காலத்திற்கு தத்தெடுத்ததாக நேரு விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹைதராபாத் வட்டத்தின் தலைமை பொது மேலாளர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், நேரு விலங்கியல் பூங்காவில் புலிகளைப் பாதுகாப்பதில் எஸ்பிஐ முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
எதிர்கால ஆண்டுகளிலும் எஸ்பிஐ தொடர்ந்து புலிகளை தத்தெடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். புலிகளை வளர்ப்பதற்காக மிருகக்காட்சிசாலையின் மேலாண்மையையும் தெலுங்கானா மாநில ஹைதராபாத் வனத்துறையையும் மிஸ்ரா வாழ்த்தினார். தத்தெடுப்பதற்காக மிஸ்ரா ரூ .15,00,000 காசோலையை தந்துள்ளார்.
ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்காவில் தொடர்ச்சியாக 9 வது ஆண்டாக புலிகளைத் தத்தெடுத்து வனவிலங்களைப் பாதுகாக்கும் தலைமை பொது மேலாளருக்கு ஐ. எஃப்.எஸ் சார்பில் சோபா நன்றி தெரிவித்தார்.