சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அமெரிக்க விண்வெளி வீரர் வாக்களித்துள்ளார்.

ரூபின்ஸ் என்ற அமெரிக்க விண்வெளி வீராங்கனை மின்னஞ்சலில் வாக்குச்சீட்டை நிரப்பி எழுத்தர் அலுவலகத்திற்கு அனுப்பினார். பூமிக்கு 253 மைல் (408 கிலோமீட்டர்) தொலைவில் இருந்தபோதிலும் வியாழக்கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவரது குரல் கேட்டது.
"சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து: நான் இன்று வாக்களித்தேன்," என்று கடந்த வாரம் சுற்றுப்பாதை நிலையத்தில் ஆறு மாத கால பயணத்தைத் தொடங்கிய குழு உறுப்பினர் கேட் ரூபின்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார்.
இந்த இடுகையில் ரூபின்ஸ் அவரது புகைப்படத்தை இணைத்து இருந்தார். அதில் பூஜ்ய-ஈர்ப்பு சூழலில் மிதக்கும் அவரது பொன்னிற கூந்தல் மற்றும் "ஐஎஸ்எஸ் வாக்குச் சாவடி" என்ற ஒரு காகிதம் ஆகியவற்றை பார்க்கமுடிந்தது.
”நாங்கள் அதை விண்வெளியில் இருந்து செய்ய முடிந்தால், எல்லோரும் அதை தரையிலிருந்து செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.", என ருபின்ஸ் கூறியிருந்தார்
மற்ற மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர்களின் அக்டோபர் 31 ஐ.எஸ்.எஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டதால் அவர்கள் விண்வெளியில் வாக்களிக்கவில்லை.