ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார்
போன்றவற்றை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான உத்தரவை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கையெழுத்திட்ட இந்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் செய்திகளுக்கும் அரசாங்க விதிமுறைகள் பொருந்தும்.
ஆன்லைன் தளங்களில் திரைப்படங்கள், ஆடியோ காட்சிகள் மற்றும் செய்தி நடப்பு விவகாரங்களும் இதன் கீழ் வரும்.
இதுவரை, டிஜிட்டல் ஊடகத்தை நிர்வகிக்க எந்த சட்டமோ அல்லது தன்னாட்சி அமைப்போ இல்லை.
இந்திய பத்திரிகை கவுன்சில் அச்சு ஊடகங்களை கவனித்துக்கொள்கிறது.செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) செய்தி சேனல்களை கண்காணிக்கிறது.இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் விளம்பரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) திரைப்படங்களை கவனித்துக்கொள்கிறது. ஆனால்OTT / ஸ்ட்ரீமிங் மற்றும் வெவ்வேறு டிஜிட்டல் மீடியா தளங்கள் அனுமதி சான்றிதழ்கள் மற்றும் தணிக்கை வாரியத்திடமிருந்து அனுமதி சான்றிதழ்களைப் பெறுவது குறித்து கவலைப்படாமல் செயல்பட்டு வருகின்றனர் என்பதே இந்த உடனடி சட்டத்தின் காரணமாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.