வம்பை விலை குடுத்து வாங்குவது போல, புகைப்பிடிக்கும் பழக்கம் உயிரை கொல்லும் என தெரிந்த பின்பும் , பெரும்பாலானோர் அதை தொடர்ச்சியாக செய்து தான் வருகின்றனர். இதன் விளைவு இன்டெர்னல் ஆர்கன் என்று சொல்ல கூடிய, நுரையீரல், கல்லீரல் போன்றவற்றை பாதித்து விடும்.

ஆனால் தற்போது சீனாவில் வசிக்கும் 60 வயதான ஒரு முதியவரின் 30 வருட புகைபிடிக்கும் பழக்கத்தினால் அவர் உடலினுள் இரண்டு கட்டிகள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த கட்டிகளின் காரணமாக அவரது சருமம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளது.
டாக்டரின் கைவசத்தால் இயல்புக்கு திரும்பிய முதியவரின் சருமம்!!
அதீத புகைபிடித்தலின் காரணமாக அவரது உடலில் பித்தநீர் வெளியேறவில்லை மேலும் புற்று நோய் கட்டி உள்ளது. பித்தநீர் வெளியேறாததன் காரணமாகவே அவரது சருமம் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது. தற்போது அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டிகளை ஆபெரேஷன் மூலமாக நீக்கிவிட்டோம். தொடர் சிகிச்சையால் தற்போது அவரின் உடலின் சருமம் மஞ்சள் நிறத்திலிருந்து மாறி வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.